தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை !! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!!

கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர். பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய அறிக்கை ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய இரகசிய ஆவணம் ஆங்கில பத்திரிகைக்கு எப்படி கிடைத்தது? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மாதம் இருமுறை வெளியாகும் ஆங்கில பத்திரிகைக்கு தகவலை கசிய வட்டவர்கள் யார் என விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *