அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது!!! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி பொதுக்குழு நடைபெறுவதை தடைவிதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அப்போது பேசிய நீதிபதிகள் நீங்கள் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே நாட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணையானது நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வந்த்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிரடி தீர்ப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

குறிப்பாக ஆதிமுக இடைக்கால பொது செயலாளராக இபிஎஸ் தேர்வானது செல்லாது என தெரிவித்து உள்ளார். இத்தகைய அறிவிப்பினால் ஓபிஎஸ் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *