யார் இந்த கோவை செல்வராஜ்?… சீறிப்பாய்ந்த ஜெயக்குமார்!

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை செல்வராஜ் எந்த கட்சியை சார்ந்தவர் என்று கூட தெரியாது என பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அதிமுக பெயர் பலகையை தனது பக்கம் எடுத்து வைத்து கொண்டதன் மூலம் முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் இன்று தரமில்லாத செயலை செய்து உள்ளார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் உடன்படுவதாகவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுட ன் இணைப்பதை போன்று மற்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

அதிமுக சார்பில் தானும் , பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்து கொண்டதாகவும், கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்ந்தவர் என்பது தெரியாது எனவும் கூறினார். யராவது எதையாவது சொல்வார்கள் அதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது.

Leave a Reply

Your email address will not be published.