பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்:இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை!!!

தமிழகத்தில் முதலீடுகளை கெடுக்கும் பொய்யான பரப்புரையில் ஈடுபட வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வேதாந்தா, ஃபாக்ஸ்கான் முதலீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று விட்டதாக அறியாமையில் கூறுகிறார் இபிஎஸ் அவர்கள் என அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார்.
அதேபோல் அரசாங்கத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை தெரியாமல் அறிக்கைகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில் முதலீடுகளை குறித்து எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பதிலாக தொழில்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம்தென்னரசு எச்சரிக்கை விடுத்து இருப்பது அதிமுக, திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.