தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம்: ஓபிஎஸ் மகன் புதிய தகவல்!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் தரப்பிலிருந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

அதேபோல் இபிஎஸ் தரப்பிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தது.

அப்போது இந்த அழைப்பானது இபிஎஸ் தரப்பினருக்கு மட்டும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அன்றைய தினத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்க உள்ளதாக, ரவீந்திர நாத் எம்.பி தெரிவித்துள்ளார். தற்போது நிலவி வரும் சூழலில் ரவீந்திர நாத் எம்.பி தெரிவித்து இருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.