திடீரென பிரதமர் மோடி செய்த காரியம்; பதறிப்போன பாதுகாப்பு அதிகாரிகள்!

PM Modi

அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா முடிந்ததும் , பிரதமர், பல்வேறு அறைகளில் அமர்ந்து இருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் திடீரென்று பார்ப்பதற்கு சென்றார்.

அரங்கத்தில் இருந்து காரில் ஏறி கிண்டி பொறியியல் கல்லூரி முகப்பு பகுதிக்கு வந்த பிரதமர், அங்கிருந்து இறங்கி, பல்வேறு அறைகளில் இருந்த மாணவர்களை பார்த்து கைகளை அசைத்து வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாக மூட்டினார். பிரதமர் தங்களது பகுதிக்கு வருவார் என தெரியாமல் இருந்த மாணவர்களுக்கு, இது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

மேலும் ஒருசில வகுப்பறைகளை பிரதமர் பார்வையிட்டு இருக்கிறார் . இதன் பிறகு இறங்கிய இடத்திற்கே பிரதமர் மீண்டும் வருவார் என நினைத்து, காரை, பாதுகாப்பு அதிகாரிகள் தயாராக நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் நடந்தே மீண்டும் விழா நடந்த அரங்கத்தின் முன் பகுதிக்கு பிரதமர் சென்றுவிட்டார்.

இதை தாமதமாக அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள், மீண்டும் பிரதமரின் காரை எடுத்துக்கொண்டு விழா நடந்த அரங்கத்தின் முன் பகுதிக்கு சென்றனர். இதனால் என்ன நடக்கிறது என தெரியாமல் பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் முன்கூட்டியே புறப்பட்டு விமான நிலையம் சென்ற நிலையில், பிரதமர் மாணவர்களை சந்தித்து அளவளாவி இருப்பது மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.