அதிரடி காட்டிய ஓ.பி.எஸ்: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு!

எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று புதிய மாவட்ட செயலாளர்களின் பட்டியலை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்மையில் மாநிலங்களவை எம்.பி-யாக செயல்பட்ட ஆர்.தர்மர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக ஓபிஎஸ் நியமித்துள்ளார். அதே போல் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் கோவை மாவட்ட ஒன்றிய கழக செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து 14 பேரை புதிய மாவட்ட செயலாளராக நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிச்சாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஊராட்சி போன்ற ரத்து செய்யப்பட்ட பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதிமுகவின் பொருளாளர் தாம்தான் என தொடர்ந்து உரிமை கோரி வரும் இபிஎஸ் அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரை அதிமுக வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.