சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: தமிழக முதல்வர் வாழ்த்து!!

உலக தடகல சாம்பியன் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதோடு நாட்டிற்காக பதக்கம் வெல்ல முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பதால், உலக தடகள போட்டியில் அழுத்தமாக உணரவில்லை என்றும் அடுத்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்ற முயல்வேன் என அவர் கூறியுள்ளார்.தற்போது உலக தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நிறச் சோப்ராவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உலக வரலாற்றில் நிரஜ் சோப்ரா மீண்டும் வரலாறு படைத்துள்ளார் என்றும் உலக அரங்கில் அவரது சாதனைகளை கண்டேன் இந்தியா பெருமிதம் கொள்கிறது என கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இவருக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.