நடிகர் அர்ஜுனின் தாயார் மரணம் : பாஜக தலைவர் இரங்கல்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அர்ஜூனின் தாயார் லட்சுமி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85 ஆகும்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல சினிமாதுறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் அர்ஜூன் அவர்களின் தாயார் திருமதி லட்சுமி தேவம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி வேதனையும் மன வருத்தமும் தருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், திரு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.