கருணாநிதி வழியில் ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்… திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!

கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் என அறிவித்திருப்பதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பியர்ல் ஹெல்பிங் ஹேண்ட் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சு மஸ்தான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது பெண் கல்வியை ஊக்குவித்தார். ஏனென்றால் ஒரு வீட்டில் பெண் கல்வி பயின்றிருந்தால் ஆண், பெண் என அந்த குடும்பமே கல்வி கற்பதற்கு உறுதுணையாக இருப்பார். எனவே தான் கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதனை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.