ஆம் ஆத்மி அரசின் அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் விரைவில் வெளிவரும் – அனுராக் தாகூர்

ஆம் ஆத்மி அரசு ஊழல் செய்வதில் புதிய சாதனை படைத்துள்ளது  என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விமர்சித்துள்ளார்.டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முறையற்ற வகையில் மதுபான லைசென்ஸ் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய அளவில் ஆம் ஆத்மி வளர்வது பாஜகவுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் அமைச்சர்கள் கைது செய்யப்படுகிறார். ஆனால் நாங்கள் சிறை செல்ல அஞ்ச மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது ஆம் ஆத்மி கட்சியில் ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்க முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஊழல்வாதிகள் ஆட்சியில் இருக்க உரிமை இல்லை.

ஏற்கனவே ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் உள்ள சத்யேந்திர ஜெயின் நினைவை இழந்து சிறையில் இருக்கிறார். தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட போது ஊழலற்ற நிர்வாகம் என்று உறுதி அளித்தார்கள். ஆனால் இப்போது ஆம் ஆத்மி அரசில் இருந்து அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன என்று விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…