தலித் என்பதால் என்னை மதிக்கவில்லை – நீர்வளத்துறை அமைச்சர் ராஜினாமா

உத்தர பிரதேசத்தின் நீர்வளத் துறையில் லஞ்சம் ஊழல் நடப்பதாக தெரிவித்து முதலமைச்சர்கள் மற்றும் அமித் ஷாவிற்கு அமைச்சர் தினேஷ் கத்திக் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அஸ்தினாபூர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ வும் நீர்வளத் துறை அமைச்சருமான தினேஷ் கத்திக் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்தார் . அமைச்சர் தினேஷ் கத்திக்கும் தனது தந்தையை போல சிறு வயது முதல் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இருந்தவர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவருக்கு நீர்வளத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் தினேஷ் கத்திக்“ என் நிர்வாகத்தின் கீழ் உள்ள நமாமி கங்கா திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியிட மாற்றத்துக்கு பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளனர். இது குறித்து நான் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை.

இந்த விவரங்களை கேட்க நான் முதன்மை செயலாளர் அனில் கர்கிற்கு அழைத்து பேசினேன். அவர் விளக்கம் அளிக்காததுடன், பாதியில் இணைப்பை துண்டித்தார். நான் தலித் என்பதால் உயரதிகாரிகள் என்னை மதிப்பதில்லை, அரசு கூட்டங்களுக்கும் அழைக்காமல் புறக்கணிக்கின்றனர், என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் பாஜக தலைவரும் முதல்வர் ஆதித்தியநாத் நெருக்கமானவருமான ஸ்வதந்திர தேவ்சிங்குடன் அமைச்சர் தினேஷுக்கு அதிக கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் பகிரங்கமாக அரசின் மீது புகார் அளித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…