கள்ள ஓட்டுகள் தடுக்க வழி!

வாக்காளர் அட்டையும் ஆதார் எண்ணையும் இணைத்தால் கள்ள ஓட்டுக்கள் குறையும் என ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்ட சீர்திருத்தத்தை: மநீம வரவேற்பு

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் தேர்தல் சீர்திருத்தம் ‘நேர்மையான தேர்தலுக்கு’ அவசியமானது என்று மக்கள் நீதி மையம் கருத்து தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இத்திட்டதை மநீம வரவேற்கிறது என அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த புதிய சீர்திருத்தம் கள்ள ஓட்டுக்களை தடுக்கும். அதே நேரத்தில் வாக்காளர்களின் முழு சம்மதத்தோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இச்சட்ட திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றப்படும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் நல் வளர்ச்சிக்கு காரணமான ‘நேர்மையான தேர்தலுக்கு’ இதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமானது. அரசாங்கம் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தன் பணியை தொடர்ந்து செய்யும் என்று செந்தில் ஆறுமுகம் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.