அதிமுகவின் அடுத்த தலைமை… சசிகலாவிற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுகயை காப்பாற்ற அம்மாவின் உண்மையான அரசியல் வாரிசு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகளால தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுகவில் நாளுக்கு நாள் தலைமை பதவிக்காக ஏற்பட்டு வரும் போட்டி தொண்டர்களிடம் சோர்வையும் மனக்கசப்பினையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு முக்கிய பகுதிகளில் அதிமுகவை காப்பாற்ற அம்மாவின் உண்மையான அரசியல் வாரிசு சசிகலா தலைமை ஏற்போம் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான தொண்டர்கள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது இந்த சுவரொட்டிகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…