கடுமையாக எச்சரித்த வைகைச் செல்வன்… ஓபிஎஸ் டீமிற்கு கிடுக்குப்பிடி!

எடப்பாடி பழனிச்சாமி தவிர வேறு யாரேனும் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர் என பெயர் சூட்டிக் கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுகவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் எச்சரித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்: ஒரு புதிய இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கின்றோம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனின் கையெழுத்தை வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது, தேர்தல் ஆணையமும் மிக விரைவில் இனி அதையே வெளிப்படுத்தும், இன்னும் எங்களோட பணி வேகப்படும், வீரத்தோடு மக்களுக்கான தொண்டையும் பணியும் நாளும் பொழுதும் பார்க்காமல் மேற்கொள்வோம் .

அதிமுகவின் உண்மை எங்கள் பக்கம் உள்ளது நியாயம் எங்கள் பக்கம் உள்ளது சத்தியம் எங்கள் பக்கம் உள்ளது நாளை நீதிமன்றத்தில் தடை உடைக்கப்படும் சீல் அகற்றப்படும்.

அதிமுகவின் உண்மையான தலைமையான இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பக்கம் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக குழப்பத்தில் உள்ளது என்று சிலர் சொல்வது தவறான கருத்து, உண்மையான அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கும் அதிமுக தான். அங்கு தான் அதிக அளவிலான செயற்குழு பொதுக்குழு மாவட்ட கழக செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றை கோடி தொண்டர்களின் முழுமையான ஆதரவும் உள்ளது.

எங்கு சின்னமும் கட்சியும் பேர் ஆதரவும் உள்ளதோ அங்குதான் அதமுக உள்ளது.அது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளது.

செயற்குழு பொதுக்குழு சேர்ந்து தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்துள்ளனர். இனி தேர்தல் நடைபெறும் அந்த தேர்தலில் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் சேர்ந்து அவரையே தேர்ந்தெடுப்பார்கள்.

அதிமுக பொலிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் எவ்வளவோ பேர் உதிரிகளாக விழுந்து விடுவார்கள். எதிரிகள் வீழ்ந்து விடுவார்கள்.சில மலர்கள் உதிர்ந்து விடும்.ஆனால் காய்ச்சு குலுங்குகிற இயக்கமாக அதிமுக தொடர்ந்து பீடு நடைபோடும்.

கழகத்திலிருந்து விலகியவர்களை மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். ரவீந்திரநாத் உட்பட கட்சியின் மீது யாரெல்லாம் எதிராக உள்ளார்களோ அவர்களை எல்லாம் நீக்கிவிட்டோம்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் அதனை தவிர்த்து பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் என சிலர் தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டால் அவர்கள் மீது நிச்சியம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.