உளவுத்துறை செத்துவிட்டது; காவல்துறை படுத்துவிட்டது; கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதங்கம்!

புதுக்கோட்டையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்: கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. இதில் உளவுத்துறை செத்துவிட்டது. காவல்துறை படுத்து விட்டது. முதலமைச்சர் செயலிழந்து விட்டார். இந்த வன்முறை சம்பவத்தை தடுக்க தவறிவிட்டது திமுக அரசு.இதற்கு கடுமையான கண்டனமாக அதிமுக தெரிவித்துக் கொள்கிறது.
ஐந்து நாட்களுக்கு பிறகு இந்த சம்பவத்தில் எஸ்பி கலெக்டரை மாற்றினால் மட்டும் போதுமா..?சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கொழுந்து விட்டு எரிந்த பிரச்சனையை அனைக்க தவறிவிட்டது திமுக அரசு.
மின் கட்டணம் கடுமையாக உயர்ந்து விட்டது. அதிமுக அரசு இதை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.அப்போது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் போராட்டம் செய்தார்.இன்று அவரே இந்த மின் கட்டணத்தை உயர்த்துகிறார் இதற்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மின்கட்டணம் என்பது மக்கள் மீது செலுத்துகின்ற அபாண்டமான ஒரு வரிச்சுமை.ஏற்கனவே சொத்து வரி உயர்த்து இருக்கிறார்கள்.மேலும் மேலும் மக்கள் மீது வரி சுமையை சுமத்தி கொண்டே இருக்கிறது திமுக அரசு.கருணையற்ற திமுக அரசு தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது.