சாதி குறித்த கேள்வியால் சர்ச்சை… விசாரணைக்குழு அறிக்கை குறித்து அமைச்சர் பொன்முடி பரபரப்பு தகவல்!

பெரியார் பல்கலைக் கழக வினாத்தாள் சர்சை குறித்து விசாரிக்க அமைக்கபட்ட குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டு கல்வி கலை விளையாட்டு துறை அமைச்சர் டேவிட் டெம்பில்மேன் சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை பின்பு செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஆஸ்திரேலியா பல்கலை கழகங்களுடன் நமது பல்கலை கழகங்களை தொடர்பு படுத்தும் நிகழ்சிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் ஆஸ்திரேலிய மாணவர்கள் இங்கு வந்தாலும் , நமது மாணவர்கள் அங்கு சென்று படித்தாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார்.

பெரியார் பல்கலைக் கழக விவகாரம் தொடர்பாக உயர் கல்வி துறையை சேர்ந்த அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றிதாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசிற்கு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தகுதியான கௌரவ விரிவுரையாளர்கள் டி.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் பணியமர்த்தபடுவர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…