#Breaking கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

MK Stalin

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அமைச்சர்கள் எ.வ.வேலு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை செயலாளர் பணிந்தர ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்ரலா உஷா, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பங்கேற்றார்..

கள்ளிக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது..

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை செயலாளர் பனிந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குனர் கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஆய்வின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆலோசித்து வருகின்றனர்..குறிப்பாக, வன்முறைக்கான காரணம், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளில் இதுப்போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க குழு அமைப்பது, 4 ஆயிரம் மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…