அனைத்து வாக்காளர்களும் தங்கள் மனசாட்சி சொல்வதை கேட்க வேண்டும் – யஷ்வந்த் சின்ஹா

இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா மற்றும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், என அனைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தார்

இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் பணம் விளையாடுவதாகவும், இதில் வெற்றி பெறுவதற்காகவே கட்சிகளை உடைத்து கட்டாயப்படுத்தி வாக்களிக்க செய்வதாகவும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்து உள்ளார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்ற வழியை இதுவே அமைத்துக் கொடுக்கும்.

அனைத்து வாக்காளர்களும் தங்கள் மனசாட்சி சொல்வதை கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எனவே அவர்கள் தங்களின் விருப்ப உரிமையை பயன்படுத்தி எனக்கு வாக்களித்து ஜனநாயகத்தை காப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நான் இதில் அரசியல் ரீதியாக மட்டும் போட்டியிடவில்லை.

அரசு நிறுவனங்களை எதிர்த்தும் போட்டியிடுகிறேன். அவர்களின் பலம் அதிகரித்துவிட்டது. அவர்கள் அரசியல் கட்சிகளை உடைத்து தங்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். மிகப்பெரிய பண விளையாட்டு இதில் நடந்திருக்கிறது என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.