நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி!! – தமிழக முதல்வர்..

கடந்த செவ்வாய் கிழமை தமிழக முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் சென்னை காவிரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் நுரையீரலில் 10% பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
தற்போது அவர் இன்றைய தினத்தில் வீடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.
அதே சமயம் முதலமைச்சரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த சூழலில் கொரோனா பாதிப்பால் முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில் கொரோனா சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்ப உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதோடு நலமுடன் பணியை தொடர்வேன் என்றும் கொரோனா தொற்றில் இருந்து குணமுடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். மேலும், என் பணி மக்கள் தொண்டாற்றுவதே என்று உறுதியேற்று தொடர்ந்து செயலாற்றி வருகிறேன் என கூறியுள்ளார்.