மாணவி மர்ம மரணம்: காவல்துறையினர் மீது மரியாதை இழந்துவிட்டது!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கும் பள்ளி மாணவி ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க பலகட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையே இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிவதாக கூறியுள்ளார்.

மேலும், அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.