ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் – ஓபிஎஸ்!!

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை என்பது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக இதனை தடுக்க அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆன்லைன் விளையாட்டினால் மிகுந்த கடன் சுமைக்கு தள்ளப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான கோயம்புத்தூர் ஆயுதப்படை காவலர் திரு.காளிமுத்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அளிக்கிறது என ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதோடு அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என நான் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
மேலும், கள்ளக்குறிச்சியில் தனியார் மாணவியின் மர்ம மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.