இபிஎஸ் – ஓபிஎஸ் இரண்டு பேருமே ஒண்ணு தான்… பளீச் பதிலடி கொடுத்த துரைமுருகன்!

வேலூர் புதிய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக இன்று முதல் சென்னைக்கு பேருந்து சேவையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:
கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வழியாக சென்னைக்கு செல்லும்போது ஆங்காங்கே வழியில் உள்ளவர்கள் தண்ணீரை எடுத்துக் கொள்கின்றனர். இது ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடந்து வருகிறது. அதனால்தான் சென்னைக்கு தண்ணீர் குறைவாக கிடைக்கிறது. எதிர்க்கட்சியில் இருக்கிறார்களே தவிர… எங்களுக்கு பன்னீர்செல்வம் ஒன்று தான் எடப்பாடியும் ஒன்றுதான். தனிப்பட்ட தயவு திமுகவுக்கு தேவையில்லை. தேவைப்படுகிற அளவுக்கு திமுக இல்லை என்றார்.
எல்.முருகன் பங்கேற்றத்தில் தவறில்லை. ஆனால், அரசின் விதிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.ஆனால் அதைப் பின்பற்றவில்லை.
ஆளுநர் ஒரு சனாதனவாதி இந்த குற்றச்சாட்டை சொல்பவர்களில் நானும் ஒருத்தன். ஸ்மார்ட் சிட்டி பணிகள் முறை கேட்டு குறித்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க வேண்டியவர்கள் மாநகராட்சி கமிஷனர். அடுத்தது கமிஷனரை கேள்வி கேட்க வேண்டிய மாவட்ட ஆட்சியர். இவர்கள் இருவர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றார்.