ஊர் முழுக்க பரபரப்பு போஸ்டர்… எடப்பாடியை அதிரவைத்த அதிமுக பெண் நிர்வாகி!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி கிடையாது ; நெல்லை மாநகர் முழுவதும் சுவரொட்டி ஓட்டிய அதிமுக பெண் நிர்வாகியால் பெரும் பரபரப்பு
கடந்த சில தினங்களாக அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர் இருப்பினும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என பன்னீர்செல்வம் அவர் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர் இதனால் யார் நிரந்தர பொதுச் செயலாளர் என்பது குறித்து தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது
இந்த நிலையில் இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் சுவரொட்டிகள் மூலம் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தமிழரசி மாநகர் முழுவதும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி கிடையாது என பழைய பேருந்து நிலையம் வண்ணாரப்பேட்டை கொக்கிரகுளம் சமாதானபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ளிட்ட மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவரொட்டியில் கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த சுவரொட்டியால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது