ஹலோ ஸ்டாலின் எப்படி இருக்கீங்க?… முதல்வரிடம் நலம் விசாரித்த மோடி!

Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் விசாரித்த மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நன்றி கூறிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டி.ஆர். பாலு, திருமதி கனிமொழி, மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…