கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரி… நிவாரணம் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுவதுமாக ஆய்வு செய்த பின் சேதம் குறித்த விபரங்களை அறிக்கையாக முதலமைச்சரிடம் வழங்கப்படும் என தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கூடலூரில் கன மழையால் சேதம் அடைத்த மங்குழி பாலத்தை தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து தொரப்பள்ளி நிவாரண முகாமில் தங்கி உள்ள பழங்குடியின மக்களை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறியதுடன் நிவாரண பொருட்களை வழங்கினர்.
முன்னதாக செய்தியளர்களிடம் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்:தமிழக முதலமைச்சர் நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்பை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்க உத்திரவிட்டுள்ளதாகவும் அதன் படி பார்வையிட வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மங்குலி பாலம் 3 ஆண்டுக்கு முன்பே உடைந்த நிலையில் தற்பொது முழுவதும் சேதம் அடைந்துள்ளதுள்ளதாகவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யவும் , சம்மந்தப்பட்ட துறைகளின் பணிகளை விரைவுபடுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்த பின் நாளை உதகையில் ஆய்வு கூட்டம் நடத்தி் பாதிப்பு குறித்த அறிக்கையினை முதல்வரிடம் வழங்கப்படும் என்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவி கிடைக்கும் என்றார்.