அதிமுக சரியான எதிர்க்கட்சியே கிடையாது… கே.எஸ்.அழகிரி சாடல்!

தமிழகத்தில் அதிமுக எதிர்கட்சி செயல்பாடு இல்லை – அவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்கு காரணமே பஜக தான் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.
அரியலூரில் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட காந்தி சிலை திறந்து வைத்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக எதிர்கட்சி செயல்பாடு இல்லை – அவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்கு காரணமே பா.ஜ.க தான்
ஏற்கனவே ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை ஒப்புக் கொண்டதற்கு காரணமே பிரதமர் கூறியதால்தான் ஒப்புக்கொண்டேன் என்பதை ஓபிஎஸ் கூறியதை நினைவுபடுத்தினார்.
இப்பொழுதும் அவர் பிரதமரை சந்திக்கச் செல்கிறார். அதேபோல் பழனிச்சாமியும் பிரதமருடன் தொடர்பில் உள்ளார். ஓபிஎஸ்,பழனிச்சாமி, சசிகலா ஆகிய மூன்று பேரையுமே பாஜக பொம்மையாக கையால்கிறது.
இந்தியா முழுவதுமே தனது கூட்டணி கட்சிகளை பாஜக அப்படிதான் சிதைத்தார்கள், சிவசேனா அழித்தது போல் அதிமுகவை பாஜக அழிக்கிறது என கூறினார்