‘தன்னை தானே தலைவர் என சொல்லக்கூடாது’… எடப்பாடியை எகிறி அடித்த சசிகலா!

அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும்; தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி என்பவர் தன்னம்பிக்கையுடன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த நிலையில் வி.கே சசிகலா தொலைபேசியில் லட்சுமியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து நேரில் வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்திற்கு வந்து மாணவி லட்சுமியை பாராட்டினார். காப்பகத்திற்கு வந்த வி கே சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக மாணவிகள் வரவேற்பு பாடல் பாடி வரவேற்றனர். தொடர்ந்து இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமிக்கு ரூபாய் ஐந்தாயிரம் காப்பகத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கினார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள அனைத்து சிறுவர் சிறுமிகள் குழந்தைகளையும் சந்தித்து இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அதிமுக பொதுச் செயலாளராக போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே பொதுச் செயலாளர் தான் அவர்கள்தான் சண்டை போடுகிறார்கள், அதிமுக பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

திமுக அரசு தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சி என்று சொல்பவர்கள் தற்போது உட்கட்சிக்குள்ளே சண்டை போடுவதால் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும் . தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது .கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் அதனை சொல்ல வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *