‘எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே’… சகட்டுமேனிக்கு சாடிய தினகரன்!

கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசி அவர்: எடப்பாடி பழனிச்சாமி, ராஜபக்சே போல் செயல்படுகிறார் என்றும் விரைவில் ராஜபக்சேக்கு நடந்த நிலையை எடப்பாடி பழனிச்சாமிக்கு நிகழும் எனத் தெரிவித்தார்.

ஒருபுறம் ஓ பன்னீர் செல்வமும் மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி துரோகிகள் என்றும் அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட கழகம் இன்று இவர்கள் கையில் சிக்கி சீரழிவதாகவும் இதை தற்போது நாங்கள் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும் என்றும் டிடிவி தினகரன் மேலும் தெரிவித்தார். தமிழகத்திற்கு ஆளுநர் பதிவு என்பது ஆட்டுக்கு தாடியை போல் தேவையில்லாத ஒன்று என அண்ணா கூறியதை தான் நாங்களும் தெரிவிக்கிறோம், திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் அதுதான் என்றும் டிடிவி தினகரன் மேலும் தெரிவித்தார்.

பொன்னையன் ஆடியோ குறித்து கேட்டதற்கு இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறேன் என்றும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் உள்ளதையே இது காட்டுகிறது என்றும் /அதிமுகவில் தற்போது அனைவரும் பண மூட்டைகளை வைத்துக் கொண்டிருப்பதாகவும் தினகரன் மேலும் தெரிவித்தார்.

அதிமுகவில் உள்ளவர்கள் சகுனி கூட்டம் என்றும் அம்மாவின் கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சரவையை கேட்காமல் தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் தினகரன் மேலும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் மயிலாடுதுறையில் நடைபெறும் செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published.