தலைமறைவானவர்களை தூக்க தனிப்படை… பீதியில் ரத்தத்தின் ரத்தங்கள்

அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தலைமறைவாக உள்ள நபர்களை பிடிக்க துணை ஆணையர்கள் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரத்தில் 42 நபர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் வருவாய் கோட்ட அலுவலர் நேற்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈபி.எஸ் ஆதரவாளர்கள் 200பேர் மீதும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீதும் 200 பேர் மீது என மொத்தம் 400 பேர் மீது 7பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 400 பேரை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் தீஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கலவரம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…