ஷாக் நியூஸ்!! தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் திமுக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தமிழக முதல்வருக்கு உடல் சோர்வு ஏற்பட்ட சூழலில் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து மீண்டும் அரசு பணிகளில் ஈடுப்பட்டார்.

இதனிடையே தமிழக முதல்வருக்கு உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று உறுதியானதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் தமிழக முதல்வர் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளின் படி ஓய்டு எடுத்து வருவதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாவின் பாதிப்பானது விரைவில் குணமடையும் அளவில் இருப்பதால் சென்னையில் நடைபெறும் செஸ் போட்டியில் தமிழக முதல்வர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.