தமிழக முதல்வர் விரைவில் குணமடைய சீமான்,அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதிப்பினால் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளும் பாதிப்படைகின்றனர். அந்தவகையில் தற்போது தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வருக்கு உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று உறுதியானதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் முதல்வர் தொடர வேண்டும் என வாழ்த்து கூறியுள்ளார்.

அதே போல் பாஜக தலைவர் தமிழக முதல்வர் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்ததாகவும், அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…