செய்யாதுரை, சந்திரசேகர் வீட்டில் ரூ.500 கோடி கணக்கில் வராத சொத்து கண்டுபிடிப்பு!!

கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் இருக்கும் சந்திரசேகர் என்பவரது வீடு மற்றும் செய்யாதுரை அரசு ஒப்பந்தாரர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை என்பது கடந்த 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
குறிப்பாக இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக பலகோடி சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரி சோதனை தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. இந்த சோதனையில் சுமார் ரூ.500 கோடி கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை நடத்தியதில் முதற்கட்டமாக பல போலியான ரசீதிகளை தயாரித்து பொருட்கள் வாங்கியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2 அரசு ஒப்பந்ததாரர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.