குடியரசுத் தலைவர் தேர்தல்..!! திரௌபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு..!!

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்  குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தரப்போவதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரில் யாரை ஆதரிக்க போகிறோம் என்ற குழப்பம் கடந்த ஒரு மாதமாக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சிவசேனா கட்சி வரும் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த ஆட்சிக்கு எதிராக கடந்த மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டார். சிவசேனா பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறியது.

இந்நிலையில், நெருக்கடி காரணமாக முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இந்த ஆட்சியின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.

முன்னாள் முதலமைச்சரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசின் துணை முதலமைச்சரானார். இந்நிலையில்  குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தரப்போவதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.