அதிமுக அலுவலகத்திற்கு சீல்; ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகம் முன் நேற்று, பன்னீர்செல்வ்ம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இதே பிரச்னை தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், தாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.