அதிமுகவை கூட இருந்தே கழுத்தறுத்த பாஜக… எம்.பி. மாணிக்கம் தக்கூர் சாடல்!

அவனியாபுரம் மதுரை மாநகராட்சி 92வது வார்டு பகுதியில் தொகுதி மேம்பாடு நிதி மூலம் . விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குடிநீர் தொட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மதுரை மாநகராட்சி 92 வது வார்டுக்கு உட்பட்ட பெரியசாமி நகர் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தகவல் அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் கட்சிக்கு வருகை தந்தால் ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு.?

காங்கிரஸ் கட்சிக்கு வர விரும்புவதை ஓ.பன்னீர்செல்வம் தான் முடிவு செய்ய வேண்டும்., தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மிகவும் மரியாதைக்குரியவர் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

அதிமுகவை அழிக்க பாஜக சதி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு? பாஜக யாரோடு அவர்கள் நட்பு பாராட்டுகிறார்களோ.? யாரோடு உறவு வைக்கிறார்களோ.? அவர்களை முதலில் அடித்து சாப்பிடுகின்ற பழக்கம்., இதற்கு பல வரலாறு இருக்கிறது.

ஜனதா தளம், ராமகிருஷ்ண ஹெட்டேவை சார்ந்தவர்களாக இருக்கலாம்., சமீப காலமாக நடந்த சிவசேனா பற்றிய வரலாறாக இருக்கலாம்.

பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் கொடுத்த பயிற்சி கூடயிருந்து கழுத்தறுப்பது., உடன் இருந்தே அவர்களை அடித்து சாப்பிடுவதும் பாஜகவின் உடைய ரத்த வெறியை காட்டுகிறது. அதை தமிழகத்திலும் செய்வதற்கான அனைத்து முயற்சியும்., அதிமுகவை அழிப்பதற்கு பாஜக முழுமையாக மேற்கொள்வார்கள் என கடுமையாக சாடினார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…