எடப்பாடி தலையில் விழுந்த இடி… அதிமுக முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை முடக்க தமிழக அரசு திட்டம்!

அவனியாபுரம் மதுரை மாநகராட்சி 92வது வார்டு பகுதியில் தொகுதி மேம்பாடு நிதி மூலம் . விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குடிநீர் தொட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மதுரை மாநகராட்சி 92 வது வார்டுக்கு உட்பட்ட பெரியசாமி நகர் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தகவல் அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது
.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசு சார்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் மீதான ரெய்டு நடப்பது குறித்த கேள்விக்கு.?

முன்னாள் அதிமுக அமைச்சர் SP.வேலுமணி பினாமிகள் மீது IT ரெய்டு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற அனைத்து ரெய்டுகளும் தமிழக அரசு ஊழல் கட்டுப்பாட்டு துறை சார்பில் நடைபெற்றது. வருமானம் ஏய்ப்பு செய்து., கொள்ளையடித்து மிகப்பெரிய அளவில் கோடீஸ்வரர்களாக மாறிய அதிமுக முன்னாள் அமைச்சர் SP.வேலுமணியின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக ஆதாரத்தை திரட்டுவதற்க்கு தமிழக அரசு பல நடவடிக்கையில் எடுத்து வருகிறது. மத்திய அரசு இதில் உண்மையான நடவடிக்கை எடுக்கும் என்றால் மக்கள் பணத்தை அரசு கையகப்படுத்த முடியும். ஆனால்., உண்மையாக அல்லது அரசியல் நோக்கத்திற்காக IT ரெய்டு நடவடிக்கை எடுக்கிறார்களா.? என்பது காலம் தான் பதில் சொல்லும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மேடை அமைக்கப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு.?

ஜல்லிக்கட்டுக்கு உரிய மரியாதை கொடுத்து அதற்காக உரிய அரங்கம் அமைப்பதற்கு திமுக அரசு முடிவெடுத்திருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் திமுக அரசு மேடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்., என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது அதற்கான கோரிக்கையை முன்வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published.