சிக்கலில் இபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள்; 400 நபர்கள் மீது வழக்குப்பதிவு!

ADMK

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் மொத்தமாக 400 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை வில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கிடையாது நடந்த கலவரத்தில் 45 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இது தொடர்பாக ராயப்பேட்டை போலீஸ் தாமாக முன்வந்து கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், போது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது மேலும் இந்த தாக்குதல் ஈடுபட்டது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இபிஎஸ் ஆவார்கள் 200 பேர் மீதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மொத்தமாக 400 பேர் மீது ஏழு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ் எம் சைதை பாபு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் 22 எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீசார் இரண்டாவது வழக்கை பதிவு செய்துள்ளனர்.

இதே சம்பவத்தில் ஈபிஎஸின் ஆதரவாளரான 122 வது வட்டக் கழக துணை செயலாளர் காமராஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 20 பேர்‌ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலாவதாக போடப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published.