நீதிமன்றங்கள் வாயிலாக சாதிக்கப் பார்க்கிறார்… ஓபிஎஸை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!

Chennai high court

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தனி நீதிபதி கூறியதாவது: சட்டப்படி பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது. அதற்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்த வில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல.

பொதுக்குழு கூட்டத்தை கூட்ட கூடாது என்ற கோரிக்கையை தவிர வேறு எந்த இடைகால நிவாரணமும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரப்படவில்லை.பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை..

எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை. 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் கேட்டுக்கொண்டதினங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23 அறிவிக்கப்பட்டது

எனவே 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவே கருத முடியும்.ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். பெரும்பான்மையனரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அனுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையிம் நீதிமன்றத்தை நாடுகிறார்.

நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார். பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. ஓ.பி.எஸ் இடைக்கால நிவாரனக்கை ஏற்க முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.