ஒய்.எஸ்.ஆர். கட்சியின் வாழ்நாள் தலைவராக மாறிய ஜெகன் மோகன் ரெட்டி..!!

ஆந்திராவில் யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.) காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு இக்கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கினார்.   

ஜெகன் மோகன் ரெட்டியின் தாய விஜயம்ம அக்கட்சியின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார். தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று இமாலய வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்று மிகப்பெரிய தலைவராக மாறினார். இந்நிலையில் இக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடந்தது.

கூட்டத்தின் நிறைவு நாளான இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கௌரவத் தலைவராக இருந்த விஜயம்மா அவரின் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published.