இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சுனாமியாக உருவெடுத்துள்ளது – ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  நாட்டில் எரிபொருட்களின் விலை மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவின் பீமா வாரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை அவரது 125 வது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக திறந்து வைத்தார்.

அப்போது நரேந்திர மோடி பேசுகையில் அல்லூரி சீதாராமராஜூ ஆங்கிலேயர்களை எதிர்த்து என முழக்கமிட்டவர். நாட்டு மக்களும் தாங்கள் சந்திக்கும் சவால்களை அவர் கூறிய அதே முழக்கத்தோடு வீரமாக சந்தித்து வருகின்றனர் என்று பேசி இருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் 133 கோடி மக்களும் தாங்கள் சந்திக்கும் சவால்களும் தைரியம் இருந்தால் எங்களை தடுங்கள் என வீரமாக கூறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியின் கீழ் உள்நாட்டில் சிலிண்டர்களின் விலை 157 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை சுனாமியாக உருவெடுத்துள்ளது. உண்மையில் மக்கள் இந்த சவால்களை எல்லாம் உருவாக்கியது பிரதமர் தான் என கூறி வருகின்றனர். மேலும், மக்கள் சோர்வடைந்து விட்டனர். இதை நிறுத்துங்கள். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *