மீண்டும் மஞ்சப்பை திட்டம் வெற்றியா?… அமைச்சர் மெய்யநாதன் பரபரப்பு தகவல்!

meendum manjapai

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழக முதலமைச்சர் தொடங்கி அதில் வெற்றி கண்டுள்ளார் அந்தத் திட்டத்தை தமிழக மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு அருகே உள்ள மாநிலங்களான ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கூட மீண்டும் மஞ்சள் பை திட்டம் சேர்ந்துள்ளது, தமிழ்நாடு முழுவதும் தீங்கு கிடக்கும் பிளாஸ்டிக்கை மீட்டெடுக்க வேண்டும் என தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

ஒன்றிய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்து அறிவிப்பை தந்து அதுவும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடுத்துள்ள முயற்சி இந்திய அளவில் பிரதிபலித்துள்ளது அதன்படி தான் ஒன்றிய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது அது வரவேற்கக் கூடியது, வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.