ஒலி மாசைக் குறைக்க நடவடிக்கை… விரைவில் வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 188நாடுகள் பங்கேற்கவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இன்னும் குறுகிய காலமே இருப்பதால் தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து பணிகளையும் முடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார், வருகின்ற 12ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும். மாமல்லபுரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார், இந்த போட்டி நடத்துவதற்கான அனைத்து பணிகளும் இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கோடு தமிழக முதலமைச்சர் மின்னல் வேகத்தில் பணியினை மேற்கொண்டு உள்ளார்.

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மூன்று நட்சத்திரம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிட்டத்தட்ட 2600 அறைகள் உடனடியாக புக் செய்யப்பட்டு அவர்கள் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கூடுதலாக தேவைக்கேற்ப 600 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது.

ஒலி மாசை தடுக்க வேண்டிய மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம், பல இடங்களில் 110 டெசிபிளுக்கு அதிகமாக ஒலி மாசு ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளோம் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக பட்டாசு வெடிப்பதனால் இருசக்கர வாகனத்தில் அதன் சிசியை அதிகப்படுத்தி ஓட்டுவதனால், விழாக்கள் நடைபெறும் இடம் விமானம் செல்லும் பகுதி ரயில் செல்லும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்தமாக ஒலி மாசு அதிகமாக உள்ளது. இது எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தன்மையிலிருந்து கடந்து ஒலி மாசு பாதிக்கக்கூடிய நிலை உள்ளது, இதை குறைப்பதற்கான விழிப்புணர்வும் நடவடிக்கையையும் தமிழக முதலமைச்சர் விரைவில் எடுத்து அதற்கான அறிவிப்பை தருவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.