தலித் என்பதால் பதவி கொடுப்பதா?… இளையராஜா விவகாரத்தில் சீமான் சீற்றம்!

Seeman

அதிமுக வலிமையாக இருக்க வேண்டுமா, சிதைந்து அழிய வேண்டுமா என்பதை அவர்கள் தான் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான், பசுமாடு, ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை தவிர பாஜவிற்கு வேறு கொள்கைகள், கோட்பாடுகள் கிடையாது இளையராஜா தகுதி பார்த்து பதவி கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடையாளம், தலித் என்பதால் பதவி கொடுப்பதா. நாம் தமிழர் கட்சி சீமான்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரட்டைமலை சீனிவாசன் 163வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தமிழர்களில் சிறந்த இசைக்கலைஞர் இளையராஜா எனவும், அவரை தமிழர்களின் அடையாளம் என கூறுவதை ஏற்க மறுத்தார். இளையராஜாவின் தகுதியை பார்த்து அவருக்கு பதவி கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடையலாம் எனவும், ஆனால் தலித் என்பதால் பதவி கொடுத்துள்ளோம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது என்றார். தலித் என்பது மட்டும் தான் இளையராஜாவின் தகுதியா என வினவினார். ஈடு இணையற்ற இசை மேதையை தலித் என மட்டுமே பதவி கொடுப்பதா என கேள்வி எழுப்பினார்.

வாக்கு அரசியலாக எடுத்து கொள்ளலாமா என்ற கேள்விக்கு இளையராஜா பாஜவிற்கு வாக்களிக்குமாறு கூறினால் யுவன் சங்கர்ராஜா முதலில் பாஜவிற்கு வாக்களிப்பாரா என சீமான் வினவினார். ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை மக்கள் ஏற்று கொள்வதில்லை என தெரிவித்த சீமான் இஸ்லாமியர், தலித், பழங்குடியினர் என அடையாளப்படுத்தி குடியரசு தலைவர் பதவி கொடுக்கும் பிஜேபி அவர்களுக்கு பிரதமர் பதவி வழங்குமா என்றார். தமக்கு விளம்பரம் தேவையில்லை என ஸ்டாலின் கூறிவிட்டதால் இனிமேல் அவரது விளம்பரங்கள் வராதா என கேட்டார்.

திராவிட மாடல் அரசியல் என்பது செயல் அரசியலோ, சேவை அரசியலோ அல்ல வெறும் செய்தி அரசியல் என சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார். சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என கூறுகிறார்கள். சொன்னதையும் செய்வதில்லை எனவும், ஆனால் சொல்லாததை தான் செய்கிறார்கள் என்னவென்றால் கொள்ளையடிப்போம், திருடுவோம், ஊழல் செய்வோம், வளங்களை கொள்ளையடிப்பது, எனவும், இதையெல்லாம் சொல்லாமல் செய்வது சீமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.