உதகையை உலுக்கி எடுக்கும் மழை; பாதிப்புகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் அதிரடி விளக்கம்!

Ooty

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 18% அதிகமாக பெய்துள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 வீடுகள் பாதிக்கபட்டுள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது. அதில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்து கொண்டு பருவ மழையை முன்னிட்டு செய்யபட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியளர்களிடம் பேசிய கா.ராமசந்திரன்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 18% கூடுதலாக தற்போது பெய்து இருப்பதாகவும் மேலும் அதிக மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

மேலும் இது வரை பெய்த பருவ மழைக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட 42 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 16 வீடுகள் பாதிக்கபட்டுள்ளதாகவும், அவற்றுக்கு உரிய நிவாரண தொகை வழங்கபட்டுள்தாக தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 283 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியபட்டுள்ளதாகவும், 456 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அதில் 9500 பேர் தங்க வைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…