முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு: ரூ. 41 லட்சம் பணம், 963 தங்கம் பறிமுதல்!!

Kamaraj

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள் இனியன், இன்பன், சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகிய பேர் மீது லட்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பதவியை தவறாக பயன்படுத்தி சுய லாபம் அடைந்து வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசையா சொத்துக்களை சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் என அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நடைபெற்ற சோதனையில் இதுவரையில் 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐபோன்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ரூ 41.06 லட்சம் பணம் மற்றும் 963 சவரன் நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் 15.5 லட்சம் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கி பெட்டக சாவி, பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.