அதிர்ச்சியில் அதிமுக… முன்னாள் அமைச்சர் வீட்டில் திடீர் சோதனை!

Kamaraj

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஆர் காமராஜ் வீட்டில் மாநில லஞ்ச ஒழிப்பு ஊழல் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவருக்கு நெருக்கமான மைத்துனரும் நகர செயலாளர் ஆர்ஜி குமார், அமைச்சர் மனைவி தங்கை ஆண்டாள், வழக்கறிஞர் உதயகுமார் , ஒன்றிய கவுன்சிலர் ராஜாளி குடிகாடு லோகநாதன் மூவாநல்லூர், அறிவழகன் நண்பர் சம்பத்குமர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ராதாகிருஷணன் ,
உள்ளிட்ட 49 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இந்த லஞ்ச ஒழிப்பு துறையின் இந்த ரெய்டு நடைபெற்று வரும் வீடுகளின் முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளதால் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது .

Leave a Reply

Your email address will not be published.