உள்ளாட்சி அமைப்புகளை வஞ்சிக்கிறதா திமுக?… பாஜக முக்கிய பிரமுகர் பகீர் குற்றச்சாட்டு!

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழக அரசு தன்னுடைய பங்களிப்பாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள பாஜக மாநில துணை தலைவர்
கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.


இதில் தேர்தல் வாக்குறுதியில்  அறிவித்தபடி மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்காதது, தமிழக முழுவதும் நடைபெறும் லாக்-அப் மரணங்கள், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்காதது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டது.

சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம் கூறும் போது,  

திமுக அரசு, தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்றும் குடும்பத்திற்கு தேவையான திட்டத்தினை மட்டுமே செயல்படுத்தி திமுக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். 

சேலம் மாநகராட்சி உள்பட மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் தமிழக அரசின் சார்பில் செய்து தரப்படவில்லை என்றும் மத்திய அரசு நிதியில் தான் உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…