அதிமுக பொதுக்குழுவில் அதுமட்டும் நடந்தால்… திருவள்ளூர் ஆட்சியர் பரபரப்பு எச்சரிக்கை!

ADMK

வருகின்ற 11ஆம் தேதி வானரகத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் கொரோனா விதிமுறைகள் மீறும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.

தமிழகத்திற்கு நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் முக கவசம் அணிவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில். திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருவார்கள் மீது 500 ரூபாய் அபராதம் பசூலிக்கப்படும்.

வணிக வளாகங்கள் கடைகளில் கை சுத்திகரிப்பான் வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்துள்ளது. இந்நிலையில் இன்று திருவள்ளூர் அருகே அரசு சார்பில் 100 பயனாளிகளுக்கு 19 லட்சம் செலவில் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் பங்கேற்று பயனாளிகளுக்கு பூந்தமல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவச பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கினார்கள்.

அதன்பின் செய்தியாளரை சந்தித்த மாவட்ட ஆட்சியர்., கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் மாவட்டத்தில் சார்பில் விதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தானாகவே முன்வந்து முக கவசம் மற்றும் கட்டுப்பாட்டு விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொரோனா விதிமுறைகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…