ஜிஎஸ்டி வரி குறித்து கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக  ஒன்றிய  அரசை கண்டித்து விமர்சனம் செய்துள்ளார். பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகம் இல்லை என காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.  அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை விமர்சனம் செய்துள்ளார்.

இதில், மருத்துவ காப்பீட்டுக்கு 18 சதவீதம், மருத்துவமனை அறைக்கு 5 சதவீதம், வைரத்துக்கு 1.5 சதவீதம் என ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமர் யாரை பாதுகாக்கிறார் என்பதை வலியுடன் நினைவூட்டுகிறேன். இதுதான் கப்பர் சிங் வரி. குறைந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் என கூறியுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கப்பர் சிங் வரி என விமர்சனம் செய்துள்ளார். இதன்மூலம் ராகுல் காந்தி Sholay திரைப்படத்தில் கிராமங்களை கொள்ளையடிக்கும் கதாபாத்திரமான ‘கப்பர் சிங்’ பெயரை குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.